Social Icons

Welcome to my Website

Friday 12 July 2013

அமெரிக்க ஆங்கிலம் (History of American English)


அமெரிக்க ஆங்கிலம் (History of American English)



மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.

பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சி பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.

சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.

அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.

(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அவை பிரித்தானிய ஆங்கில முறைமையில் இருந்து மாறுபட்டதாக, அதேவேளை அமெரிக்க இலக்கண முறைமைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்கப் புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதுவே காலப்போக்கில் நிலைத்தும் விட்டது.

இவரே 1783ல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.

அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.

1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர் நோவா வெப்ஸ்டர்.(First American Dictionary) பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.

அதன்படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre 
அமெரிக்க ஆங்கிலம்: center, theater 

பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite
அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse
அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze

ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.

நோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, பிரித்தானிய ஆங்கிலத்தை விட, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.

ஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பல சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவை அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.

ஒப்பீட்டளவில் பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பல சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.

இன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதனையும் அறியமுடிகின்றது.

உதாரணம் சில சொற்கள்:
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat
அமெரிக்க ஆங்கிலம்: Apartment

பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift
அமெரிக்க ஆங்கிலம்: Elevator

பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips
அமெரிக்க ஆங்கிலம்: Fries

மேலும் அமெரிக்காவின் Hollywood திரைப்படத்துறையின் வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சி, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், தொழில் நுட்பம், இணையம் என இன்னும் பல்வேறு வழிகளில் பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலம் பலரையும் ஈர்த்து வருகிறது. அமெரிக்க நாகரிகமும் இன்று உலகின் பல்வேறு மக்களில் மோகமாக மாறிவருகின்றது என்பதும் ஒரு காரணியாகும். இவை அமெரிக்க ஆங்கிலத்தை உலக அரங்கில் மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.

இன்று ஆங்கிலம் என்பது இன்னொரு மொழியினருடன் பேசும் கருவியாக மட்டுமன்றி, அதிகாரம், அரசியல், சமூக அந்தஸ்து, கலாச்சாரம் என பல்வேறு மட்டங்களில் ஈர்க்கும் இணைக்கும் ஒரு உலகலாவிய ஊடகமாக மாறிவருகிறது. 

அமெரிக்க ஆங்கில வரலாற்றிற்கு முற்பட்ட ஆங்கில மொழியின் வரலாறு இங்கே சொடுக்கி பார்க்கலாம்.

பிரிட்டிஸ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் சொற்களில் மட்டுமன்றி, இலக்கணத்திலும், ஒலிப்பிலும் கூட வேறுபாடுகள் உள்ளன. அவற்றை தமிழ் விளக்கத்துடன் எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.

நன்றி!

 HK Arun

www.aangilam.blogspo.com

Saturday 22 June 2013

ஆங்கிலம் கற்போம் அறிவை வளர்ப்போம்

English Lessons

குறிப்பு:

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் "தமிழ் கூறும் நல்லுலகம் நலம்பெறும் வகையில் தன் சமூகம் சார்ந்து தன்னால் இயன்ற ஏதேனும் ஒரு பணியைச் செய்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு." அந்தவகையில் தான் இந்த  வலைத்தளம் தோற்றம் பெறுகிறது. இன்றைய தொழில் நுட்ப உலகில் ஆங்கிலம் கற்காமல் எவரும் எந்தவொரு வளர்ச்சிப் படியையும் எளிதாக எட்டிவிட முடியாது. யப்பான், சீனம், பிரஞ்சு மொழிகளில் போன்று உலகின் அனைத்து கற்கை நெறிகளும், கண்டுப்பிடிப்புகளும் எமது மொழியிலேயே கிடைக்கக்கூடிய நிலையும் இல்லை; அதற்கான அரசியல் பின்புலமும் எமக்கில்லை. தமிழர்களைப் பொருத்த மட்டில், ஆங்கிலம் ஒரு தொடர்பாடலுக்கான மொழியாக மட்டுமன்றி, உலகின் அனைத்து உயர் கற்கை நெறிகளுக்குமான ஓர் திறவுகோள் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் அறிவாளிகள் என்று நம்மை நாமே கூறிக் கொள்வதில் எந்த சாதனைகளும் தோன்றிவிடப்போவதில்லை. வளர்ந்து வரும் அறிவியல் உலகில், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற அறிவியல் முன்னேற்றம் மிகுந்த நாட்டு மாணவர்களுடன், எமது இளையத் தலைமுறையினரும் போட்டியிட்டு வெற்றி ஈட்டவேண்டும். உலக அறிவாளிகள் மத்தியில் தான் நாம் அறிவாளிகளாகத் திகழவேண்டும். "யாதும் ஊரே; யாவரும் கேளீர்!" என புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கூற்றுக்கிணங்க, தரணியில் அனைத்து நாடுகளுக்கும் எம்மவர் சென்று அல்லது சென்ற நாடுகளில் எல்லாம் எம்மவர் தமிழர் எனும் இனத்தின் தனித்துவத்தை தடம் பதிக்க வேண்டும். தமிழர் எனும் இனம் அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஓர் அறிவார்ந்த இனமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கெல்லாம் அனைத்து நாடுகளுடனான மதிநுட்பத் தொடர்பாடலும் ஆங்கில மொழியின் ஆளுமையும் மிக அவசியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.

தமிழர் எனும் இனம்; உலகில் தொன்மையான ஒரு இனமாகும்.  நாம் நாடற்ற இனமல்ல; நாட்டை நாமே அந்நியரிடம் பறிகொடுத்த இனம். இலங்கையில் மாவட்டமாகவும், இந்தியாவில் மாநிலமாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ஓர் அப்பாவி இனம். இந்த ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்து, இழந்த தமிழர் இறையான்மையை மீட்டெடுக்கும் பொறுப்பு எங்கள்  அனைவருக்கும் உண்டு. மாறிவரும் உலக அரசியல் ஒழுங்குகளுக்கு முகம் கொடுக்கவும், அரசியல் சாணக்கியர்களாக எம்மை நாமே வளர்த்துக்கொள்ளவும், அறிவார்ந்த சமூகமாக வளரும் எமது இளஞ்சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பும் கூட ஒவ்வொருவருக்கும் உண்டு. ஐநாவில் தமிழர் கொடி ஏற்றும் பொறுப்பும் கூட வளர்ந்து வரும் இளம் தமிழ் சமுதாயத்தினரிடமே உண்டு. அதற்கு ஆங்கில மொழி ஆளுமை அவசியமானது என்பதை எவரும் மறக்கலாகாது.

உலகில் அனைத்து இனத்திற்கும் தன்னினம் மீதும், தன் இனத்தினர் மீதும் ஒரு பற்று உண்டு. அந்தவகையில் "தமிழர் உயர்ந்தால்; தமிழ் தானாகவே உயரும்" எனும் கொள்கை என்னுடையது. அந்நிய நாடுகளுக்கு சென்றால் தான் அந்தந்த நாட்டவர் அவரவர் மொழி மீது எத்தகைய பற்று கொண்டுள்ளனர் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. எத்தகைய திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது. தமிழனும் கடல்கடந்து பயணிக்கும் போது தான் தன் இனத்தின் தனித்துவத்தை உணர்வான். தன் மொழி மீது பற்றும் கொள்வான். தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களையும் முன்னெடுப்பான். கிணற்றுத் தவலையாய் உள்ளூருக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் பல நாடுகளுக்கும் பயணித்து பாருங்கள்; அதுவே உங்கள் உலக அறிவின் விரிவாக இருக்கும். அக்கடல் கடந்த அறிவுத் தேடலுக்கு ஆங்கிலம் வழி காட்டும்.

எனவே வளரும் தமிழ் இளஞ்சமுதாயத்தினர் அனைவரும் கட்டாயம் ஆங்கிலம் கற்க வேண்டும்; கற்றுயர வேண்டும் என்பதே எனது விருப்பமும், இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தின் உருவாக்க நோக்கமுமாகும்.

உங்களின் பங்களிப்பு:

இவ்வலைத்தளத்திற்கு வருகை தரும் உறவுகளே! உங்களுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு.

இன்றைய உலகில் ஆங்கிலம் எந்தளவுக்கு அவசியமானது என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு, உங்கள் நண்பர்களுக்கு, வளரும் தமிழ் இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துரையுங்கள். அத்துடன் இந்த  வலைத்தளத்தில் வழங்கப்படும் பாடப் பயிற்சிகள் பயனுள்ளவை என நீங்கள் கருதினால் இத்தளத்தை மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவருக்கும் அறிமுகப்படுத்துங்கள். இத்தளத்தில் வழங்கப்படும் பாடங்கள் அனைத்தும் பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கிப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கிக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் உங்கள் கணினியின் ஊடாக பயிற்சிகளை தொடர முடியும். கணினி வசதியில்லாதோர் அச்செடுத்து பயன்படுத்தலாம். வசதியுள்ளோர் வசதியில்லாதோருக்கு அச்செடுத்து உதவிடவும் முடியும். 

அது ஆங்கிலம் கற்க விரும்புவோருக்கு நீங்கள் செய்யும் உதவியாகவும், இத்தளத்திற்கு நீங்கள் செய்யும் பங்களிப்பாகவும் இருக்கும்.

நன்றி!
அன்புடன் கேதீஸ்.
கடைக்கோடி தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்!
 

Wednesday 15 May 2013

popular post

மட்டக்களப்பு  தமிழ் செய்திகள் இவைகளையும் எமது இணையதளங்களில பார்க்க தவறாதீர்கள்
BATTICALOA TAMIL NEWS

இணையதளம் வடிவமைத்தல்

Monday 29 April 2013

இனிய குடும்பம்

இனிய குடும்பத்தினருடன் இனிமையான உறவு பிரிந்து வாழும் நினைவோ அரிது இணையதளத்தின் அருமையால் .



Sunday 28 April 2013

என்னுடைய நிகழ் படம்.

கேதீஸ்வரன் ,  என்னுடைய நிகழ்  படம்.


 

இவ்னையதழதுக்கு சென்று உங்களின் ஆங்கிலம் கற்கும் மற்றும் ஏனைய அறிவியல் தொடர்பான  அறிவினை வளர்த்துக்கொண்டு பயன்பெற்று மற்றவர்களுக்கு பயண்தரும் வகையில் தங்களது கருத்துகளையும் வழங்கும்படி வேண்டுகின்றேன். 

நன்றி 
அன்புடன்.
கேதீஸ்.